உலக சந்தையில் தடுமாறும் தங்க விலை: வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

Gold Price in Sri Lanka Colombo Today Gold Price Gold
By Dhayani Oct 09, 2025 05:34 AM GMT
Report

சர்வதேச சந்தையில் தங்க விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதுடன் , ஒரு அவுன்ஸ் தங்கம் 4,000 அமெரிக்க டொலரைத் தாண்டி, புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. 

இந்த அதிரடி உயர்வுக்கு பல உலகளாவிய காரணங்கள் அடிப்படையாக அமைந்துள்ளதுடன், அமெரிக்காவில் ஏற்பட்ட அரசு முடக்கம், டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர், புவிசார் அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்டவை தங்க விலை உயர்விற்கு காரணமாக அமைந்துள்ளது.

இதன் விளைவாக, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்க விலை 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் சடுதியான விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

தங்கத்தின் சடுதியான விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

உலக சந்தையில் தடுமாறும் தங்க விலை: வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் | World Gold Prices Increase

பாதுகாப்பான சொத்தாக தங்கம் தேர்வு 

 இதன் காரணமாக உலக சந்தைகளில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தைத் தேர்வு செய்துள்ளனர்.

“இந்த அரசியல் பிரச்சினைகள் நீண்ட காலம் நீடிக்காது எனவும், அடுத்த 3 முதல் 4 வாரங்களில் சூழ்நிலை சீராகும் பட்சத்தில், தங்க விலையின் தற்போதைய உயர்வு சரிவைச் சந்திக்கலாம்” என்று நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.

அதாவது தற்போது காணப்படும் இந்த உச்ச நிலை நீண்ட காலம் நீடிக்காது எனவும், தங்கம் அடுத்த சில நாட்களில் 2 முதல் 3 சதவீதம் வரை சரியும் வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தங்கம் தற்போது வரலாற்று உச்சத்தை அடைந்தாலும், இது நிலையானது அல்ல. வரவிருக்கும் வாரங்களில் சிறிய சரிவு ஏற்படும், அதை பயன்படுத்தி தங்கம் வாங்குவது முதலீட்டாளர்களுக்கு ஒரு புத்திசாலித்தனமான வாய்ப்பாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

உலக சந்தையில் தடுமாறும் தங்க விலை: வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் | World Gold Prices Increase

கொழும்பு தங்க விலை நிலவரம்

அந்த வகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய ( 09)  தங்க விற்பனை தரவுகளின் படி,

22 கரட் தங்கத்தின் ஒரு பவுன் - 313.950 ரூபாவாகவும்,22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 39.250 ரூபாவாகவும்

24 கரட் தங்கத்தின் ஒரு பவுன் - 342,500 ஆகவும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42.810 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

21 கரட் தங்கத்தின் ஒரு பவுன் - 299,700 ஆகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 37,460.00 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. 

இதேவேளை, வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்று 4,000 டொலரைத் தாண்டியுள்ளதால் இலங்கையிலும் தங்க விலை சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



Gallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US