ஹோட்டலில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட இளைஞன் மரணம்: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் போதைப்பொருள் மற்றும் ஐஸ் பயன்படுத்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திடீரென சுகவீனமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கடவத்தையை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
ஐஸ் போதைப்பொருள்
கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 7 நண்பர்களுடன் விருந்திற்கு வந்த அவர்,போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியமையினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் இளைஞனை பரிசோதித்த வைத்தியர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
விருந்தில் கலந்து கொண்ட 7 இளைஞர்களை தாம் எச்சரித்ததாகவும் பரிசோதனையின் போது ஆபத்தான மாத்திரை மற்றும் ஐஸ் உட்கொண்டதை இளைஞர்கள் ஒப்புக்கொண்டதாகவும் களுபோவில போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி பந்துல ஜயசிங்க தெரிவித்தார்.
வைத்திய அதிகாரி
உயிரிழந்த இளைஞன் போதை மாத்திரை ஒன்றை முழுமையாக உட்கொண்டதாகவும், ஏனையவர்கள் தலா பாதி மாத்திரையை உட்கொண்டதாகவும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் 20 மற்றும் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து ஆபத்து தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்ததாகவும் மரண விசாரணை அதிகாரி பந்துல ஜயசிங்க தெரிவித்தார்.
களுபோவில போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஜானக அபேசிங்க உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri