இலங்கையில் கல்வித்துறையிலுள்ள மாபியாக்களுக்கு முடிவு கட்டுவது யார்......!
இலங்கையின் பிரதான பல துறைகளில் ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடி வருகின்றன. அரச இயந்திரத்தின் பலர் இதில் பாத்திரவாளியாக உள்ளனர்.
இந்நிலையில் வைத்தியத்துறையில் உள்ள பாரிய மோசடி ஒன்றை வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.
இது வட மாகாணம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், கிழக்கு மாகாண வைத்தியர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைத்தியத்துறையில் மோசடிகள்
வைத்தியத்துறையில் இடம்பெறும் மோசடிகள் குறித்து தீவிர விசாரணை செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் இலங்கையில் கல்வித்துறையும் பெரும் மாபியா கும்பலிடம் சிக்கித் தவித்து வருகிறது. இலவச கல்வி இன்று பாரிய பணமீட்டும் லாபகரமான வியாபாரமாக மாறியுள்ளது. இதிலும் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பெற்றோரினால் தவிர்க்க முடியாமல் தனியார் கல்வி நிலையங்களை நாட வேண்டிய நிர்பந்தங்களை இந்த மாபியா கும்பல் ஏற்படுத்தியுள்ளது.
தனியார் கல்வி
சமகாலத்தில் ஒரு சில ஆசிரியர்களை தவிர அதிகளவானோர் கல்வியின் ஊடாக பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொள்ளவே முயற்சிப்பதாக பல பெற்றோர் தமது ஆதங்கங்களை தெரிவித்துள்ளனர்.
வைத்தியதுறையில் இடம்பெறும் மோசடிகளை வெளிக்கொணர்த்த வைத்தியர், போன்று கல்வித்துறையிலும் ஒருவர் முன்வர வேண்டும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பாகும்.