தென்னிலங்கையில் உச்சகட்ட கோபம் காரணமாக மகளை கொலை செய்த தந்தை
தென்னிலங்கையில் தந்தைக்கும் மகளுக்கும் ஏற்பட்ட முறுகல் நிலையில் கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி, உரகஸ்மன்ஹந்திய தெல்கட பகுதியில் நேற்றையதினம் தந்தையின் தாக்குதலால் 14 வயதான மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தந்தைக்கும் மகளுக்கும் இடையில் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு தொடர்பாக ஏற்பட்ட நீண்டநேரத் தகராறே இந்த கொலைக்கு காரணமாகியுள்ளதாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
ஆத்திரமடைந்த தந்தை
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளுக்கமைய, குறித்த தகராறு எல்லை மீறிச் சென்ற நிலையில், ஆத்திரமடைந்த தந்தை மன்னா கத்தியால் மகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான சிறுமி உடனடியாக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் உடல் தற்போது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri