ரணிலுக்கு ஆதரவளிக்காதவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்க நேரிடும் : கஞ்சன விஜேசேகர
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் அமைச்சுப் பதவிகளில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் அந்த அமைச்சுப் பதவிகளை விட்டு விலக்க நேரிடும் என எதிர்பார்ப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கட்சியின் பணிகள்
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து மேலும் தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவது புதிய விடயம் அல்ல எனவும், இரண்டு வருடங்களுக்கு முன்னர் முன்னைய கட்சி எடுத்த தீர்மானம் அது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்கு அப்பாற்பட்ட கட்சிகளின் கருத்துக்கேற்ப கட்சியின் பணிகள் நடைபெறுவதுதான் இன்று கட்சியில் காணப்படுகின்றது என்றார்.
கட்சி பல துண்டுகளாக பிரிந்து கிடப்பதாகவும், இப்படியே போனால் மிக சொற்பமே மிஞ்சும் என்றும், இனிவரும் காலங்களில் பொதுச்செயலாளர் மட்டுமே கட்சியில் இருப்பார் என்றும் கூறினார்.
பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதற்கு தம்மிக்க பெரேராவின் தகுதிகள் தொடர்பில் சிக்கல் நிலவுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |