உலகம் முழுவதும் சரிவை சந்தித்துள்ள பங்குச் சந்தைகள்
அமெரிக்கா (America) தொடங்கி உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளானது சரிவை எதிர் நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, ஜப்பான், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளின் சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள்
இந்த வாரத்தின் முதல் நாளிலே ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பங்குச் சந்தைகலும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
இந்தியா மட்டுமல்லாது ஆசியாவின் மற்ற பங்குச் சந்தைகளிலும் இது எதிரொலித்தது.
மேலும், தைவானின் முக்கிய பங்குச்சந்தை குறியீடும் 7.7 சதவீதம் சரிந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் கொரியாவின் கேஓஎஸ்பி (KOSP) குறியீடு 6.6 சதவீதம் சரிந்ததுள்ளதோடு, ஜப்பான் பங்குச்சந்தை குறியீட்டெண் நிக்கேய் 13 சதவீதம் சரிந்து, ஒரே நாளில் 4,451 புள்ளிகளை இழந்துள்ளது.
2011 உலக நிதி நெருக்கடிக்குப் பிறகு ஜப்பானின் நிக்கேய் இவ்வளவு பெரிய இழப்பைக் கண்டதும் இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது.
வட்டி விகிதம்
ஜப்பான் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஜப்பான் நாணயமான யென் மதிப்பு உயர்ந்து வருவதும் ஒரு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்று வாரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ஜப்பான் யென் மதிப்பு 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இவற்றின் தாக்கம் காரணமாக அங்கு பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது.
இந்நாடுகளை ஹாங்காங் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பங்குச்சந்தைகளும் சரிவைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |