காசாவிடம் 89 பாலஸ்தீனியர்களின் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்
காசா(Gaza) பகுதியில் இஸ்ரேல்(Israel) இராணுவத்தால் கொல்லப்பட்ட 89 பாலஸ்தீனியர்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியதாக காசா அரசு ஊடக அலுவலகம் இன்று(06) தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் இஸ்ரேலின் வசம் இருந்த இந்த உடல்கள், தெற்கு காசா பகுதியில் உள்ள கெரெம் ஷாலோம் வழியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்டதாக பெயர் வெளியிடாத பாலஸ்தீனிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர் தாக்குதல்கள்
இதன் போது உடல்கள் வரிசை எண்கள் கொண்ட பிளாஸ்டிக் பைகளில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் உடல்களின் தோற்றம், கொல்லப்பட்ட இடங்கள் பற்றிய எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 37 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri