பிரான்ஸில் இருந்து இலங்கை செல்வோருக்கு அதிர்ச்சித் தகவல் - சிக்கப் போகும் பலர்
பிரான்ஸில் உதவி பணத்தை பெற்றுக்கொண்டு இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக நலத்திட்டங்களில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்க பிரான்ஸ் அரசாங்கம் கொண்டு வரும் புதிய சட்டத் திருத்தம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
புதிய சட்டத்திற்கமைய, பிரான்ஸ் திறவாய் நிறுவனம் மோசடிகளைக் கண்டறிய பயனாளிகளின் சில தனிப்பட்ட தரவுகளை அணுக செனட் சபை அனுமதி அளித்துள்ளது.
உதவித்தொகை
இதில் முக்கியமாக, ஒருவர் பிரான்சில் வசிக்கிறாரா அல்லது வெளிநாட்டில் இருந்துகொண்டு உதவித்தொகை பெறுகிறாரா என்பதை உறுதிப்படுத்த விமான நிறுவனங்களின் தரவுகள் மற்றும் தொலைபேசி இணைப்புத் தரவுகள் ஆய்வு செய்யப்படலாம்.

இந்த நடவடிக்கையின் மூலம், ஆண்டுதோறும் சமூகப் பாதுகாப்புத் துறையில் ஏற்படும் சுமார் 13 பில்லியன் யூரோ இழப்பைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பிரான்ஸில் இருப்பதாகப் பொய்க் கணக்கு காட்டி உதவித்தொகை பெறுவதை இதன் மூலம் எளிதாகக் கண்டறிய முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri