தமிழர் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய தொழிற்சாலைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
உடையார்கட்டு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த யோகட் உற்பத்தி தொழிற்சாலைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் அடிப்படையில் நீதிமன்றம் இன்று (14.11.2025) 25,000 ரூபா தண்டம் வழங்கியுள்ளது.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இதன்போது, Medical certificate இல்லாமை, Food premises CAP approval இன்மை, முகச்சவரம் செய்யாமை, தண்ணீர் பகுப்பாய்வு சான்றிதழ் இன்மை போன்ற பல்வேறு சுகாதார குறைபாடுகள் அங்கு கண்டறியப்பட்டன.

இதனைத் தொடர்ந்து குறித்த தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு எதிராக உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸ் இன்று மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்தார்.
வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உரிமையாளர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.
இதனையடுத்து நீதிமன்றம் 25,000 ரூபா அபராதம் விதித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறான குறைபாடுகள் இடம்பெறாதவாறு கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



