மன்னாரில் இடம்பெற்ற பெண்கள் வலுவூட்டல்களுக்கான யோகா நிகழ்வு
சர்வதேச யோகா தினத்தையொட்டி 'பெண்கள் வலுவூட்டல்களுக்கான யோகா' எனும் கருப்பொருளில் மன்னார் (Mannar) நானாட்டான் டிலாசால் கல்லூரியில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வுகள் இன்றைய தினம் (19.06.2024) நடாத்தப்பட்டுள்ளன.
இதன்போது, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி (Sai Murali) நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்திய துணை தூதுவர்
மேலும், யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி நாகராஜன், நானாட்டான் டிலாசால் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் மனோ மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.

அதேவேளை, நானாட்டான் சிவராஜா இந்து பாடசாலைக்கு இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |












தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri