நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய பத்திரிகைக்கு ஒன்றுக்கு வழங்கிய செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளைய தினம் இலங்கை வரவுள்ளார்.
கூட்டணி அரசாங்கம்
இந்நிலையில், இந்தியாவில் கூட்டணி அரசாங்கம் மீண்டும் அமைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக இலங்கை வரும் அவர் இலங்கையில் பல்வேறு தரப்பினரைச் சந்திக்கவுள்ளார்.
இந்த வருடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகின்றமை குறித்து இந்த சந்திப்புகளில் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குறிப்பிட்டார்.
மேலும் இந்தியாவின் முதலீட்டில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
