கனேடிய உயர்ஸ்தானிகரகம் மீது விமல் வீரவன்ச பகிரங்க குற்றச்சாட்டு
மூன்றாம் பாலின விடயம்(Transgender) ஒரு இலாபகரமான வியாபாரமாக கருதப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மூன்றாம் பாலினத்தை மேம்படுத்துவதற்காக கனேடிய உயர்ஸ்தானிகரகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலின சமத்துவ யோசனை
இந்தநிலையில் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்பான பிரச்சினைகளை பாலின சமத்துவ யோசனையில் இணைக்காமல், அதற்கு தனியாக தீர்வு காண வேண்டும் என்று நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்றாம் பாலினத்தவர்களை ஊக்குவிப்பது இலாபகரமான தொழில் என்றும், மேற்கத்திய நாடுகளில் மாணவர்கள் தங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் பாலினத்தை மாற்றிக்கொள்ளும் தேர்வு வழங்கப்படுவதாக விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மேற்கு நாடுகளில் மூன்றாம் பாலின அறுவை சிகிச்சைக்கு சுமார் 4,000 டொலர்கள் வசூலிக்கப்படுவதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |