இந்தியாவில் இணையம் மூலம் பெற்றுக்கொண்ட பொதிக்குள் நாகபாம்பு!
இந்தியா - பெங்களூரைச் சேர்ந்த பொறியியலாளர்களான தம்பதியினர், இணையம் (Online) மூலம் பெற்றுக்கொண்ட பொதி ஒன்றில் நாகபாம்பு இருந்தமை தொடர்பில் பெங்களூர் பொலிஸில் முறைப்பாட்டு செய்துள்ளனர்.
தமக்கு கிடைத்த பொதியை திறந்ததும் உள்ளே நாகப்பாம்பு ஒன்று வெளியே ஊர்ந்து செல்ல முயற்சித்ததாக அவர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தாம் காணொளியாக பதிவு செய்ததாகவும், கண் கண்ட சாட்சிகள் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதிகாரபூர்வ மன்னிப்பு
இந்த சம்பவத்தை அடுத்து பொருளை அனுப்பிய நிறுவனம், தமக்கு பணத்தை திருப்பி கொடுத்ததாக தெரிவித்த தம்பதியினர், அதற்கு அப்பால் தங்களுக்கு எந்த இழப்பீடும் அல்லது அதிகாரபூர்வ மன்னிப்பும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பொருளுடன் இருந்த பாம்பு பிடிக்கப்பட்டு பின்னர் மக்கள் அணுக முடியாத பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |