வரலாறு காணாத போர் யுக்தியுடன் அமெரிக்கா.. உலகிற்கு பாரிய அச்சுறுத்தலாகும் ஈரானிய அணுசக்தி
அமெரிக்கா, தற்போது ஈரானை எதிர்கொள்ள இதுவரை இல்லாத அளவிற்கு வலுவான நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் ஊடகத்திடம் கூறுகையில், ஈரான் அணு ஆயுதத்தை பெறும் சாத்தியம் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் “ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்” என குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய உளவுத்துறை
மேலும், “உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு அவர்கள் ஏற்படுத்தும் பாதிப்பைப் பாருங்கள், ஈரானின் நடத்தை எல்லாத் திசைகளிலும் தாக்குதல் நடத்தும் வகையில் உள்ளது.

இப்படியான நடவடிக்கைகளை அவர்கள் தங்களுடைய அணு பாதுகாப்பின் கீழ் மேற்கொண்டால் நிலைமை எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்யலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் வால்ட்ஸ், ஈரானின் போர் நடவடிக்கைகளுக்கு உதவ ரஷ்யா தகவல் பகிர்ந்து வருகிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துள்ளார்.
ஆனால், அது உண்மையாக இருந்தாலும், “அது பெரிய அளவில் பயனளித்ததாக தெரியவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
QR முறைமையை கண்காணிக்க எரிபொருள் நிலையங்களில் களமிறக்கப்படும் பொலிஸார்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை