முல்லைத்தீவில் பெரும்போக நெல் அறுவடை: விளைச்சல் பாரியளவில் வீழ்ச்சி (Video)
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை விளைச்சல் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கால போக பயிர்ச்செய்கைகளுக்குரிய இரசாயன உரமின்மை மற்றும் களை நாசினி, கிருமி நாசினி என்பவற்றின் விலையேற்றம் காரணமாக அவற்றைத் தாம் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் இம்முறை தமது பெரும்போக நெற்செய்கையின் விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் தற்போது எரிபொருட்களின் விலை அதிகரிப்பினால் அறுவடை இயந்திரக்கூலி முன்பை விட அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் பலத்த இன்னல்களுக்கு மத்தியில் பிரதான வீதிகளை நெல் உலரவிடும் தளங்களாக பயன்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



