அனுராதபுரம் வரை மட்டுமே செல்லும் யாழ்தேவி
யாழ்தேவி தொடருந்து எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி முதல் 5 மாதங்கள் அனுராதபுரம் வரை மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்தில் இருந்து வவுனியா வரை பேருந்து வசதி

அனுராதபுரம் முதல் வவுனியா வரையான தொடருந்து பாதை புனரமைக்கப்படுவதால், பணிகள் முடிவடையும் வரை தொடருந்து பாதை மூடப்பட்டிருக்கும். இதன் காரணமாக யாழ்தேவி தொடருந்து கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படும்.
வவுனியா முதல் முருகண்டி வர யாழ் ராணி

அனுராதபுரத்தில் இருந்து வவுனியா வரை செல்ல தொடருந்து பயணிகளுக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளது.
காங்கேசன்துறை முதல் முருகண்டி வரை சேவையில் ஈடுபடும் யாழ் ராணி தொடருந்து குறித்த 5 மாதங்கள் வவுனியா-முருகண்டி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 14 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam