புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
பிரபல WWE மல்யுத்த வீரர் மற்றும் நடிகராக பலரின் சிறுவயதில் மனதை கொள்ளை கொண்ட ஹல்க் ஹோகன் 71வது வயதில் இன்று காலமாகியுள்ளார்.
இன்று WWE தங்களது X பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ஹோகன் மரணித்ததாக அறிவித்துள்ளது.
WWE is saddened to learn WWE Hall of Famer Hulk Hogan has passed away.
— WWE (@WWE) July 24, 2025
One of pop culture’s most recognizable figures, Hogan helped WWE achieve global recognition in the 1980s.
WWE extends its condolences to Hogan’s family, friends, and fans.
உலகளாவிய புகழ்
"WWE மிகவும் வருத்தத்துடன் WWE ஹால் ஆஃப் ஃபேம் வீரர் ஹல்க் ஹோகன் மறைந்ததை தெரிவித்துக் கொள்கிறது.
"பொப் கலாச்சாரத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவரான ஹோகன், 1980களில் WWEயை உலகளாவிய புகழுக்கு கொண்டு செல்ல உதவியவராவார்.
" WWE, அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
தவறான வார்த்தை
1980 மற்றும் 1990களில் அவர் பிரபலமான இவரின் உண்மையான பெயர் ஹோகனின் உண்மையான பெயர் டெரி போலியா ஆகும்.
1977ஆம் ஆண்டில் மல்யுத்தத்தில் காலடி எடுத்து வைத்த அவர், 50வது வயது வரை போட்டியிட்டு வந்தார்.
2018ஆம் ஆண்டில், தவறான வார்த்தையொன்றை பயன்படுத்தியதால் அவர் நீக்கப்பட்டார்.
எனினும் ஹால் ஆஃப் ஃபேம் பட்டத்தை, பின்னர் WWE மீண்டும் வழங்கியது.




