மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சடங்கு ஆராதனை
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்ததை நினைவுபடுத்தும் கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான துக்க மற்றும் தியாக நாளாக புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நாளில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், சிலுவைப்பாதை மற்றும் பாடுகளைத் தியானித்தல் போன்றவை நடைபெற்றது.
இந்நிலையில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் புனித வெள்ளி திருச்சடங்கு ஆராதனை திருப்பலி இயேசு ஆண்டவரின் இறப்பை குறிக்கும் வகையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டாக இடம்பெற்றது.
சாட்சி சொன்ன பிள்ளையானின் வதைமுகாம் பணியாளர்கள்! நீதிமன்றில் சிஐடியினர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்கள்..
திரையில் மூடப்பட்டிருந்த திருச்சுரூபங்கள்
இதன்போது ஆலயத்தின் அனைத்து திருச்சுரூபங்களும் திரையினால் மூடப்பட்டிருந்தது. இயேசுவின் பாடுகளை குறிக்கும் முகமாக ஆராதனை திருப்பலி வழிபாடுகளில் குருக்கள் சிவப்பு ஆடை அணிந்து இருந்தனர்.
இயேசுவின் திருச்சிலுவை பீடத்திற்கு கொண்டுவரப்பட்டு பீடத்தில் ஆயர், குருக்கள், அருட் சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் சிலுவை முத்தி ஆராதனையில் ஈடுபட்டனர்.
ஹோர்மூஸ் அருகே வெடித்து சிதறிய அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானம்! அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஈரான்..
பெரிய வெள்ளி ஆராதனை திருப்பலியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.





தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 20 மணி நேரம் முன்
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri