சாட்சி சொன்ன பிள்ளையானின் வதைமுகாம் பணியாளர்கள்! நீதிமன்றில் சிஐடியினர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்கள்..
கடந்த 2025 ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்தும் சுமார் 359 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த அவர், நேற்றுமுன்தினம்(2)கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் அந்த வழக்கின் பிரதான சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இந்தநிலையில்,முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்போது சிஐடியினர் பல அதிர்ச்சிகரமான தகவல்களை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். அதில் பிள்ளையானால் நடத்தப்பட்டு வந்த வதைமுகாம் தொடர்பிலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வதைமுகாம் செவனப்பிட்டிய எனும் இடத்தில் நடத்தப்பட்டுள்ளது, அதில் தான் துணைவேந்தர் கொல்லப்பட்டுள்ளார் என்று சாட்சி கிடைக்கப்பெற்றுள்ளது
. இந்த விடயங்கள் தொடர்பில் விளக்குகின்றது லங்காசிறியின் Newsinsightதமிழ் நிகழ்ச்சி...