ராஜபக்சர்களால் சலேவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - ஆளும் தரப்பிலிருந்து வெளியான அதிர்ச்சித் தகவல்
கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் சுரேஷ் சலேவுக்கு ராஜபக்சர்களால் அச்சுறுத்தல் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சர்களிடமிருந்தும் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் சரத் வீரசேகர ஆகியோரிடமிருந்தும் சலேவுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுகர்ண தெரிவித்துள்ளார்.
அவர்களின் மோசமான பக்கத்தை அம்பலப்படுத்தி விடுவார் என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளதகா நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜ வாழ்க்கையில் சுரேஷ் சலே
இந்நிலையில் தடுப்பு காவலில் அனைத்து வசதிகளுடன் ராஜ வாழ்க்கையில் சுரேஷ் சலே உள்ளதாக ஜகத் மனுகர்ண தெரிவித்துள்ளார்.

அவருக்கு கிடைத்த வசதிகளை கேட்கும்போது, தனக்கும் சிறை செல்ல தோன்றுவதாக, நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட அனைவரும் தற்போது அச்சத்தில் உள்ளனர்.
இது நீதிக்கான காலம் என்பதால் அதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
கடந்த ஆட்சியாளர்களிடமிருந்து அச்சுறுத்தல் உள்ள நிலையில், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, சுரேஷ் சலேவுக்கு சலுகைகளை வழங்கியுள்ளார்.
சலேவுக்கு வழங்கப்பட்டுள்ள வசதி
அவருக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளைப் பார்க்கும் போது சிறைக்குச் சென்றுவிட தான் தோன்றுகின்றது. கழன்று விழுந்த பற்களைக் கூட அவருக்குப் பொருத்திக் கொடுத்துள்ளார்.

சலேவுக்கு மூக்கு வழியாக உணவு உட்கொள்வதை நிறுத்திவிட்டு வாய் வழியாக உணவருந்தத் தீர்மானித்துள்ளமை மிகவும் நல்லது. அத்துடன், அந்த கடவுச்சொற்களை வழங்கிவிட்டால் நன்றாக இருக்கும்” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுகர்ண மேலும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri