கென்யாவின் புதிய ஜனாதிபதியாக வில்லியம் ரூட்டோ தெரிவு
கென்யாவின் துணைத் தலைவர் வில்லியம் ரூட்டோ, நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
கென்யாவின் ஐந்தாவது அதிபருக்கான போட்டியில் வில்லியம் ருடோ வெற்றி பெற்றுள்ளார் என்று சுதந்திர தேர்தல் மற்றும் எல்லை ஆணையம் (IEBC) அறிவித்துள்ளது.
ரூட்டோ 7,176,141 (50.49 சதவீதம்) வாக்குகளைப் பெற்று அவரது போட்டியாளரான ரைலா ஒடிங்காவை மிகக் குறுகிய அளவில் தோற்கடித்துள்ளார்.
தேர்தல் முடிவின் சட்டபூர்வமான தன்மை
ஆனால் முடிவு அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஏழு கமிஷன் உறுப்பினர்களில் நான்கு பேர் முடிவை சரிபார்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கை உடனடியாக தேர்தல் முடிவின் சட்டபூர்வமான தன்மை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றி உரை
ரூட்டோவின் பிரச்சாரம் மக்களை அதிகாரம் செய்வதற்கான கீழ்மட்ட பொருளாதார மாதிரியை மையமாகக் கொண்டது.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, ரூட்டோ ஒரு உரையை நிகழ்த்தியுள்ளார்.
அவ் உரையில் அவர் தனது வெற்றியை ஏற்றுக்கொண்டார், தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மற்றும் நாட்டின் நன்மைக்காக பாடுபடுவதாக உறுதியளித்துள்ளார்.
"பழிவாங்குவதற்கு இடமில்லை, திரும்பிப் பார்ப்பதற்கு இடமில்லை, நாங்கள் எதிர்காலத்தைப் பார்க்கிறோம்," என்றும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
