பிரித்தானிய மகா ராணியின் மறைவு: முன்னாள் ஜனாதிபதியின் இரங்கல் செய்தி
பிரித்தானிய மகா ராணியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தனது இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்

“பொதுநலவாய நாடுகளின் தலைவரும், பிரித்தானியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியுமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இழப்பு குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எனக்கு ராஜரீதியிலான வரவேற்பு அளித்ததற்காக நான் எப்பொழுதும் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அரச குடும்பத்திற்கும் பிரித்தானிய மற்றும் பொதுநலவாய மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan