சம்மாந்துறையில் சர்வதேச சுற்றாடல் தினம் அனுஷ்டிப்பு
உலக சுற்றாடல் தினமான ஜூன் 05 ஆம் திகதியை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கடந்த வாரம் முழுவதுமாக 51 கிராம சேவகர்கள் பிரிவிலும் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது.
அத்தோடு, இன்று(05)சம்மாந்துறை பிரதேசத்துக்குட்பட்ட கமு/சது/அல் அஸ்கர் பாடசாலையில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு செயலமர்வும் பாடசாலை அதிபர் எம்.ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.
சுற்றாடல் தினம்
பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்" எனும் இவ் வருட தொனிபொருளுக்கு ஏற்ப இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எச்.நைரூஸ்கான்,சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.சாஜிதா, ஏ.கே.எப் சாமிலா,சுதேச வைத்திய சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.எல்.எம் நளீம்,சம்மாந்துறை அல் உஸ்வா உயிர் காக்கும் படையினர்,மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் குறோசியா கடாபி, மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் பின்னர் இன்று(5)இரண்டாம் கட்ட நிகழ்வாக சுற்று சூழல் பாதுகாப்பு சம்மந்தமாக விழிப்புணர்வு செயலமர்வும் மரம் நடுகை நிகழ்வும் சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனத்தில் (SLIATE)அதன் பணிப்பாளர் எஸ்.எல் முஸ்தபா ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri
