காணாமல் போன டொலர்கள்: ஜனவரியிலேயே தோன்றிய அபாய அறிகுறிகள் - வரி செலுத்துவோர் தலையில் விழப்போகும் பேரிடி..!
காணாமல் போன நிதி தொடர்பில் ஆதாரங்களுடன் கூடிய முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக நிதியமைச்சுக்கு ஒரு மாதக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
திறைசேரியினால் அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் டொலர்கள் காணாமல் போனதாக கூறப்படும் நிலையிலேயே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குச் செலுத்தப்பட வேண்டிய 10 அரச கடன் திருப்பிச் செலுத்தும் பரிவர்த்தனைகள் உரிய பெறுநரைச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், நிதியமைச்சின் அதிகாரிகள் குழு, நேற்று (30.04.2026) நாடாளுமன்ற பொது நிதி மீதான குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதில், திறைச் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும மற்றும் சிரேஷ்ட நிதி அமைச்சக அதிகாரிகள், சிரேஷ்ட மத்திய வங்கி அதிகாரிகள் முன்னிலையாகினர்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொது நிதி மீதான குழுவின் தலைவரும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷா டி சில்வா கூறுகையில், காணமல் போன நிதி மீட்கப்படாவிட்டால், அதன் சுமை இறுதியில் வரி செலுத்துவோர் மீது விழக்கூடும்.
பணம் சென்றடையவில்லை
ஜனவரி மாதத்திலேயே அபாய அறிகுறிகள் தோன்றியுள்ளன, ஆனால் மார்ச் மாதத்தில்தான் அவுஸ்திரேலியாவில் உள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எந்தப் பணமும் சென்றடையவில்லை என்பதை அதிகாரிகள் நேரடியாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும் இந்த விடயம் நாடாளுமன்றத்திற்கும் குழுவுக்கு ஏன் முன்னதாகத் தெரிவிக்கப்படவில்லை என்பது உட்பட, செயல்முறைகளில் கடுமையான குறைபாடுகளைக் குழு கண்டறிந்துள்ளது.
இந்தநிலையில் 2025 நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட அந்த 10 பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள். நிதி அமைச்சகத்தால் உள் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் குற்றப்புலனாய்வுத்துறையினர் மற்றும் நீதிமன்றங்கள் பொறுப்பானவர்களைத் தீர்மானிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan