எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் (01.05.2026) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இது குறித்து பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை திருத்தங்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தற்போதைய விலை நிலவரம்
இந்த நிலையில் கடந்த மார்ச் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பிற்கு பிறகு, சந்தையில் தற்போது நிலவும் விலைகளே தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் ரக பெட்ரோல் 398 ரூபாய்க்கும், 95 ஒக்டேன் ரக பெட்ரோல் 455 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம் ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 382 ரூபாய்க்கும், ஒரு லீட்டர் சூப்பர் டீசல் 443 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 255 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.