கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொலிஸார்
உலகத்தொழிலாளர் தினமான இன்று 1ஆம் திகதி கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் நடைபெறவுள்ள மே தின பேரணிகளுக்கு பாதுகாப்புக்காக 30,000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மினுரா செனரத் தெரிவித்துள்ளார்.
மகரகமவில் நடைபெறவுள்ள பிரதான பேரணிக்குக் கூடுதலாக, தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் 21 பொதுப் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளது என்றும், அவற்றில் 14 பேரணிகள் கொழும்பு நகரில் மட்டும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு போக்குவரத்துத்திட்டம்
அதன்படி, அவற்றின் பாதுகாப்பிற்காக பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் தேவைக்கேற்ப பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இவ்வாறு, மே தினத்தில் பொலிஸ் திணைக்களத்தின் சுமார் 96 சதவீதத்தினரை சிறப்புப் பணிகளுக்கு நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு நகரில் நடைபெறவுள்ள மே தினப் பேரணிகளை முன்னிட்டு ஒரு சிறப்புப் போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் சிறப்பு போக்குவரத்து திட்டத்தினை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இக்கட்சி, இம்முறை 21 மாவட்டங்களில் 21 மே தினப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இதில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நுவரெலியா மற்றும் மகரகம ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி
சஜித் பிரேமதாச தலைமையிலான இக்கட்சியின் மே தினப் பேரணி மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சர்வஜன அதிகாரம்
திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரத்தின் மே தினக் கூட்டம் கொழும்பு ஹென்றி பேதிரிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
இக்கட்சியின் பேரணி பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
முன்னிலை சோசலிச கட்சி
முன்னிலை சோசலிச கட்சி தமது மே தினக் கூட்டத்தை கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
டாப் 5-ல் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி.. சீரியல்களின் TRP ரேட்டிங் Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam