இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் - இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
இவ்வாண்டின் ஏப்ரல் மாத இறுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், கடந்த பெப்ரவரி இறுதியில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் சூழலைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் துறையில் ஏற்பட்ட அழுத்தங்கள் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
காணாமல் போன டொலர்கள்: ஜனவரியிலேயே தோன்றிய அபாய அறிகுறிகள் - வரி செலுத்துவோர் தலையில் விழப்போகும் பேரிடி..!
மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு
2026 மார்ச் மாத இறுதியில், சீனாவின் மக்கள் வங்கியுடனான பரிமாற்ற வசதி உட்பட, இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 7.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.

சந்தையில் இருந்து வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்த போதிலும், அந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் சேவை கொடுப்பனவுகள் காரணமாக மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri