உலகக் கிண்ணப் புறக்கணிப்பு தொடரும்: ஃபிஃபா தலைவரின் முடிவை நிராகரித்தது ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்
உலகக் கிண்ணப் போட்டிகளின் சிறுபான்மைப் பங்குகளை விற்பனை செய்யும் யோசனையை சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா (FIFA) திரும்பப் பெற்றுக்கொண்ட போதிலும், உலகக் கிண்ணப் போட்டிகளைப் புறக்கணிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை என ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமான யுவேஃபா (UEFA) அறிவித்துள்ளது.
உலகக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய தொடர்களின் பங்குகளை விற்பனை செய்ய ஃபிஃபாவின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஃபிஃபாவின் அனைத்து நிகழ்வுகளிலிருந்தும் விலகுவதாக யுவேஃபாவின் 55 உறுப்பு நாடுகளும் கடந்த வாரம் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தன.
ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்
கடுமையான எதிர்ப்புகள் காரணமாக ஃபிஃபா தலைவர் தனது முன்மொழிவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட போதிலும், யுவேஃபா விதித்த நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான முயற்சிகள் மீண்டும் இடம்பெறாது என்ற உறுதியான வாக்குறுதி வழங்கப்படாமை மற்றும் ஃபிஃபா தலைவர் மீதான நம்பிக்கையை யுவேஃபா இழந்துள்ளமை ஆகிய காரணங்களால் இந்த புறக்கணிப்புத் தீர்மானம் தொடர்வதாக யுவேஃபா விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.