பொறளை மெகசின் சிறையில் கைதிகள் குழுவால் பதற்றம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்
புதிய இணைப்பு
கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் 'ஈ' (E) பிரிவில் இன்று (06) இரவில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
பொறளை மெகசின் சிறைச்சாலையில் இன்று (06) இரவு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரவு 10.20 மணியளவில் சிறைச்சாலையின் 'E' பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அந்தப் பிரிவிலிருந்து வெளியேறி வன்முறையில் ஈடுபட்டதையடுத்து அங்கு அமைதியின்மை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்
எவ்வாறாயினும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த அமைதியற்ற நிலை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.