3,546 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்த பொலிஸார்
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான 3,546 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸாரினால் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் சட்டத்தின் பிடியில் சிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களுக்கு அமைய இந்தத் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய குமார வூட்லர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது வெளிநாடுகளில் தங்கியுள்ள 'சிவப்பு பிடிவிராந்து' பிறப்பிக்கப்பட்ட 95 சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாஷிக் என்பவருக்குச் சொந்தமான சொத்துக்களை பொலிஸார் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகின்றனர்.
திட்டமிட்ட குற்றச் செயல்களடன் தொடர்புடையவர்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகர்களின் பெருமளவு சொத்துக்கள் பொலிஸாரினால் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.