இலங்கைக்கு கிடைக்கவுள்ள 110 மில்லியன் அமெரிக்க டொலர்! கிடைத்துள்ள அங்கீகாரம்
டிட்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க உலக வங்கி 110 மில்லியன் டொலர் நிதி டிட்வா சூறாவளியால் கடுமையாக சேதமடைந்துள்ள இலங்கையின் 600 கிலோமீற்றர் வீதிகளை புனரமைத்து மறுசீரமைப்பதற்காக 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.
உலக வங்கியினால் இன்று (30) இந்த நிதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் சந்தைகள், பாடசாலைகள் மற்றும் சுகாதார சேவைகளை மீண்டும் அணுகுவதற்கு உதவும் வீதிகளுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
கடுமையான வானிலை
புனரமைக்கப்படும் வீதிகள் காலநிலை மாற்றங்களுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளன.
மேம்படுத்தப்பட்ட நீர் வடிகால் கட்டமைப்புகள், மண்சரிவுகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் கடுமையான வானிலை நிலைமைகளைத் தாங்கக்கூடிய புதிய பொறியியல் தொழில்நுட்பங்கள் ஆகியவையும் இதில் உள்ளடங்குகின்றன.

டிட்வா சூறாவளி இலங்கையின் வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும், மீள்கட்டமைப்பின் மூலம் மேலும் வலுவானதும் தாக்குப்பிடிக்கக்கூடியதுமான உட்கட்டமைப்பு கட்டமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக உலக வங்கி குழுமத்தின் இலங்கைக்கான முகாமையாளர் கெவோர்க் சர்க்சியன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் வீதிகளை புனரமைப்பதைத் தாண்டி, மக்களின் வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்புதல், விவசாயிகளை சந்தைகளுடன் இணைத்தல் மற்றும் குடும்பங்களை அத்தியாவசிய சேவைகளுடன் மீண்டும் இணைத்தல் ஆகியவற்றையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri