விராட் கோலியின் அதிரடி சதம் - ஐசிசி தரவரிசையில் கிடைத்துள்ள இடம்
மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் அடித்ததால் ஐசிசி தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
இந்தியா- மேற்கிந்திய தீவுஅணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்றது.
ஐசிசி தரவரிசை
இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 296 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 41.4 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரரான சுப்மன் கில் 110 ஓட்டங்களும் , அடுத்து களம் இறங்கிய விராட் கோலி ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களையும் பெற்று சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர்.
விராட்கோலி முன்னேற்றம்
இந்த சதம் மூலம் ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் விராட் கோலி 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சுப்மன் கில் 816 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 796 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 2ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

ரோகித் சர்மா 4ஆவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 5ஆவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர அசாம் 6ஆவது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய குசல் மெண்டிஸ் 10ஆவது இடத்தில் இருந்து 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் 8ஆவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 9ஆவது இடத்திலும், அயர்லாநது வீரர் ஹேரி டெக்டர் 10ஆவது இடத்திலும் உள்ளனர்.
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri