பின் ஓயா தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி!
வட்டவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பின் ஓயா தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஐந்து பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (18.9.2026) பிற்பகல் வட்டவளை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பின் ஓயா தோட்டத்தில் தேயிலை பறிக்கும் போது, தேயிலைச் செடிகளுக்குள் இருந்த குளவி கூடு கலைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
தேயிலை மலையில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

வைத்தியசாலை வட்டாரங்களின் தகவலின்படி, இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் எவரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

