வெள்ளவத்தையில் நடந்த பயங்கரம் - தமிழ் கடை உரிமையாளரால் பணியாளர் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு
கொழும்பு - வெள்ளவத்தையில் கொலை குற்றச்சாட்டின் பேரில் கடை ஒன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய நபரை கொலை செய்த குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள தையல் நிலையம் ஒன்றில் பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உரிமையாளர் கைது
புஸ்ஸலாவை - எல்பொட தோட்டப் பகுதியைச் சேர்ந்த 42 வயதான தையல் நிலைய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே உயிரிழந்தார்.
பிரேதப் பரிசோதனை
சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காகக் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri