இலங்கையின் பொருளாதார நிலை குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையின் பொருளாதார நிலைமை ஸ்திரமடைந்துள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தற்போது நடைமுறையில் உள்ள சீர்திருத்தங்களைத் தொடர்வது அவசியம் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதமாக காணப்படும் என தெரிவித்துள்ள உலக வங்கி முந்தைய எதிர்வு கூறல்களை விட இது முன்னேற்றகரமான நிலையெனவும் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதார மீட்சி
தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் நான்கு காலாண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் முக்கியமான கட்டமைப்பு மற்றும் கொள்கை சீர்திருத்தங்களுமே இதற்கு காரணம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
எனினும், பொருளாதார மீட்சி இன்னமும் பலவீனமான நிலையிலேயே உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
நுண் பொருளாதார ஸ்திரதன்மையை பேணுதல், கடன்மறுசீரமைப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்வது, வருமானத்தை அதிகரித்து வறுமையை குறைப்பதற்காக கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுப்பது ஆகியவற்றிலேயே பொருளாதார மீட்சி தங்கியுள்ளது எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam
