கிழக்கு பல்கலைக்கழக பணி புறக்கணிப்பு.. வெளியிடப்பட்டுள்ள அறிக்கை
கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரின் செயற்பாட்டினை கண்டித்து 29ஆம் திகதி தொடக்கம் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றது.
இது தொடர்பில் கிழக்கு பல்கலைகழக ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்குப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கமானது (TAEU) பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரட்ணவின் முறையற்ற செயற்பாடுகளைக் கண்டித்து அடையாளப் பணிப் புறக்கணிப்பினை 29-09-2025 அன்று தொடக்கம் முன்னெடுத்து வருகின்றது.
அசௌகரியங்கள்
குறிப்பாக பட்டமேற்கற்கைகள் பீடத்தின் முதலாவது பீடாதிபதியினை முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட பணியிடம் இல்லை எனக் காண்பித்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு நீக்கியது.
ஆயினும், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மற்றுமொரு பீடாதிபதியும் அங்கீகரிக்கப்பட்ட பணியிடம் இல்லாமலிருந்தும் தொடர்ந்தும் பதவியில் செயற்பட அனுமதி வழங்கியிருந்தனர்.
மேலும் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தால் மீண்டும் பட்டமேற்கற்கைகள் பீட பீடாதிபதிக்கான பணியிடம் 20-06-2025 முதல் அங்கீகரிக்கப்பட்டிருந்தும் இன்னமும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அப்பீடாதிபதி நியமனத்தை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்புச் செய்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு அசௌகரியங்களை பல்கலைக்கழகம் எதிர் நோக்குவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
