கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பதற்ற நிலை - பொலிஸ் அதிகாரி தொடர்பில் பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது நேற்றைய தினம் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குருந்துவத்தை பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர். இதன் போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் நீதிமன்ற உத்தரவை தனது ஆடைக்குள் திணித்து அங்க சேட்டையில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் ஊடகங்கள் முன்னிலையில் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதை அடுத்து நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது. சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் உள்ளிட்ட குழுவினரை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்காக, குருந்துவத்தை பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டனர்.
பெண்ணின் அதிர்ச்சி குற்றச்சாட்டு
நீதிமன்ற உத்தரவுடன் குறித்த பகுதிக்கு சென்ற போதே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. பொலிஸார் நீதிமன்ற உத்தரவைக் காண்பித்து குறித்த இடத்திலிருந்து வெளியேறுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அறிவித்துள்ளனர்.

எனினும், அங்கிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் ஆதரவாளர்களான ஆண் மற்றும் பெண் குழுவினர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பொலிஸார் வழங்கிய நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாத ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸாருடன் வாக்குவாததத்தில் ஈடுபட்டதுடன் எக்காரணம் கொண்டும் அவ்விடத்தை விட்டுச் செல்லப்போவதில்லை எனக் கூறியுள்ளனர்.
பொலிஸாருக்கும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட குழுவினருக்கும் தள்ளுமுள்ளு
இதனால் பொலிஸாருக்கும் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட குழுவினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, குருந்துவத்தை பொலிஸார் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட குழுவினரைத் தள்ளியவேளையில், நீதிமன்ற உத்தரவைப் பெண்ணொருவரின் மார்புக்குள் திணித்ததாக பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் பொலிஸார் மார்பகத்தைத் தொட்டதாக அப் பெண்ணும், முந்தைய தினம் மந்திரவாதியாக செயற்பட்ட பெண்ணும் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்ததுடன், தாம் பொலிஸாரினால் அத்துமீறலுக்கு உள்ளானதாகவும் தெரிவித்தனர்.
you may like this video