நாமல் ராஜபக்சவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (23) கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவிற்கும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்துக்கு சற்றுமுன்னர் (23) அழைத்து வரப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணை
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக நாமல் ராஜபக்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அநுரவின் தலையை ஏழு துண்டுகளாக உடைக்க நள்ளிரவில் சூனியம் செய்யும் பிக்குகள் - பின்னணியில் தீவிர திட்டம்