வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு: அம்பிகா சற்குணநாதன்
வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன என மனித உரிமை செயற்பாட்டாளரான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (05.11.2023) விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்களுக்கான சட்ட விழிப்புணர்வுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து குறிப்பிடுகையில், சமூக மட்டத்தில் பல்வேறு பட்ட அமைப்புக்கள் வேலை செய்கின்றன. அவை பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன என்று குறிப்பிடுகின்றன.
குடும்ப வன்முறை
இதற்கு காரணம் நாட்டில் இருக்கின்ற சட்டங்களை கூட சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதாகும்.
2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் குடும்ப வன்முறைக்கு எதிராக பாதுகாப்பதற்கான சட்டம் இதனூடாக கூட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை அதில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பில் பல சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது அதைக் கூட செய்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் கரைச்சி கண்டாவளை பூநகரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சட்டவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.