இலங்கை - பங்களாதேஷ் போட்டி நடப்பதில் சிக்கல்: வெளியான காரணம்
நாளை இலங்கை – பங்களாதேஷ் போட்டி நடப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரில் நாளை (06) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு காரணமாக போட்டி நடைபெறுவதில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடும் காற்று மாசுபாடு
குறித்த தகவலை பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மோசமான காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு பங்களாதேஷ் வீரர்கள் தங்கள் உடல்நிலையை ஆபத்தில் ஆழ்த்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், டெல்லியில் நிலவும் காற்றுச்சூழல் ஆட்டத்தை மேலும் பாதிக்கும் என சந்திக ஹத்துருசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
