தென்னாப்பிரிக்க அணியை பந்தாடிய இந்திய அணி அபார வெற்றி
புதிய இணைப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை இந்தியா 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் பெற்றது.
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியால் 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்து 243 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய அணி தரப்பில் ரவிந்திரா ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மூன்றாம் இணைப்பு
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணியின் விராட் கோலி அதிகபட்சமாக 101 ஓட்டங்களை பெற்றதுடன் ஷ்ரேயாஸ் ஐயர் 77 ஓட்டங்களை பெற்றுள்ளனர்.
இதன்படி, தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 327 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
முதலாம் இணைப்பு
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 37 ஆவது போட்டியில் சம பலம் கொண்ட அணிகளாக விளங்கும் தென்னாப்பிரிக்க மற்றும் இந்தியா அணிகள் இன்று மோதவுள்ளன.
குறித்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (05.11.2023) பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்திய அணி
இந்நிலையில் 2023 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி பங்கேற்ற 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அத்துடன், தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்று அரையிறுதி சுற்றை உறுதி செய்யுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே காணப்படுகின்றது.