இளம் யுவதியின் விபரீத முடிவின் பின்னணி குறித்து வெளியான தகவல்
சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் உள்ள வென்னப்புவ நைனமடம பகுதியில் ஜின் ஓயாவில் குதித்து காணாமல் போன யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஜா-எல, போபிட்டியவைச் சேர்ந்த 17 வயதுடைய உமயங்கனா சத்சரணி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
28 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் நைனமடம், ஜின் ஓயா பாலத்திற்கு அருகில் வந்த சிறுமி, தனது காதலனுக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி கூறிய நிலையில் ஜின் ஓயாவில் குதித்தார்.
யுவதியின் முடிவு
அதே நேரத்தில், அந்த இளைஞனும் அவரை காப்பாற்ற ஜின் ஓயாவில் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜின் ஓயாவில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரையும் காப்பாற்ற அருகிலுள்ள ஹோட்டலின் இரண்டு ஊழியர்கள் ஆற்றில் கயிற்றை வீசினர். யுவதி நீரில் காணாமல் போன நிலையில், இளைஞன் கயிற்றில் தொங்கி கரையை அடைந்தார்.
வென்னப்புவ, நைனமடம பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞன் உயிர் பிழைத்த நிலையில், 1990 அம்புலன்ஸில் மாரவில ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த யுவதியின் தாய் தற்போது இரண்டாவது கணவருடன் வசித்து வருவதாகவும், அவரது குடும்பத்தில் தகராறுகள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல் போன யுவதியின் உடல், பாலத்தின் அருகே மிதந்து கொண்டிருந்ததை உள்ளூர்வாசிகள்நேற்று மதியம் கண்டுபிடித்தனர்.
அவரது பிரேத பரிசோதனை மாரவில ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam