டக்ளஸின் பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சந்தேகம்! நீதி அமைச்சர் விளக்கம்
மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இதுவரை எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் இன்று(30.12.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், வடக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான சுரேன் ராகவன் நேற்று(29) பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

இதற்கு பதில் கொடுக்கும் வகையில் நீதி அமைச்சர் இன்று பேசுகையில், "சிறையில் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் இதுவரையில் பதிவாகவில்லை.
எவ்வாறாயினும், டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின், அவற்றை முறையாகச் சமர்பிக்கப்படும் பட்சத்தில், அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.