கணவனின் தவறால் நசுங்கி உயிரிழந்த மனைவி
பொலநறுவையில் தனது கணவரால் பின்னோக்கி செலுத்தப்பட்ட லொறியில் சிக்குண்டு மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் வெலிகந்த, மகாசென்புர பகுதியை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கணவர் லொறியை பின்னோக்கிச் செலுத்தியபோது, மனைவி வீட்டின் முன்னாலிருந்த பூச்சாடிகளை அப்புறப்படுத்தி கொண்டிருந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
இதன் போது லொறிக்கும் சுவருக்கும் இடையில் நசுங்கி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தாயார் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.