பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் 19 வயது யுவதி கைது
ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 19 வயதுடைய பெண்ணொருவர் இன்று புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பிராந்திய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம், இபுனுபதுதா வீதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருடன் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.