கொழும்பில் பெண்கள் இருவரின் மோசமான செயல்! பொலிஸாரால் கைது
கொழும்பு - பொரள்ளை பிரதேசத்தில் இரு பெண்களை பொலிஸார் நேற்றைய தினம் (13.10.2022) கைது செய்துள்ளனர்.
பிள்ளைகளுக்கு போதை மாத்திரை வழங்கி யாசகத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டிலேயே குறித்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிள்ளைகளுக்கு போதை மாத்திரை வழங்கிய பெண்கள்
இரண்டு சிறிய பிள்ளைகளுக்கு போதை மாத்திரை வழங்கி அவர்களை நித்திரையடையச் செய்து பின்னர் இவ்வாறு குறித்த பெண்கள் அவர்களைப் பயன்படுத்தி யாசகம் மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக கூறி பெண்கள் இருவரும் மக்களிடம் பணம் கோரியுள்ளனர்.
மக்களிடம் யாசகம்
அத்துடன் பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிக்க பாரியளவு தொகை பணம் தேவைப்படுவதாக மக்களிடம் இந்த இரண்டு பெண்களும் கூறி யாசகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்தே இவ்வாறு யாசகம் செய்த பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam