கொழும்பில் யாசகர் ஒருவர் செய்த மோசமான செயல்! பொலிஸாரால் கைது
போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் யாசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாசகம் பெற்று சம்பாதித்த சம்பாதித்த பணத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிருலப்பனை பிரதேசத்தில் நபர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகநபரின் சகோதரியிடம் விசாரணை
அங்கு சோதனை நடத்திய பொலிஸ் குழு, சம்பந்தப்பட்ட நபரிடம் ஐஸ் போதைப்பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் சகோதரியிடம் விசாரணை நடத்தி வீட்டில் இருந்த பணம் குறித்து விசாரித்த போது குறித்த பணம் யாசகம் பெற்று சம்பாதித்தது என்று கூறியுள்ளார்.

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri
