மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
களுத்துறையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த இரண்டு மாடி கட்டடத்தில் கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (06) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸார் விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் பயாகல, யங்கம பகுதியை சேர்ந்த வெலிவிட்ட முதலிகே விஸ்வ பிரபுத்த (24) வயது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வேலை செய்யும் இடத்தின் இரண்டாவது மாடியில் நிறுவப்பட்ட கான்கிரீட் கலவை இயந்திரத்துடன் தரை தளத்திற்கு விழுந்துள்ளார்.
இதன்போது பலத்த காயமடைந்த இளைஞர் வேலை செய்யும் இடத்தில் இருந்த தொழிலாளர்களால் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam