வெளிநாடு சென்று டிக்டொக்கிற்கு அடிமையான தாய் - இலங்கையில் பரிதவிக்கும் குடும்பம்
டிக்டொக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையான இளம் மனைவி, குடும்பத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கணவனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தம்புள்ளையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு வீட்டை விட்டு சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக குவைத்திற்கு பணிப்பெண்ணாக மனைவி சென்றுள்ளார்.
டிக்டொக்கிற்கு அடிமை
இதன்போது டிக்டொக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அதற்கு அடிமையானதாக பாதிக்கப்பட்ட கணவன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குடும்பத்துடன் தொடர்பு கொள்வதை முற்றாக நிறுத்திய மனைவி, டிக்டொக்கில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார்.
மனைவியின் செயற்பாட்டில் கடும் அதிருப்தி அடைந்த கணவன், மனைவி மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திடம் கோரியுள்ளார்.
பொலிஸாரின் உதவி
எனினும் குறித்த பெண் ஏற்கனவே இலங்கை வந்துள்ள நிலையில் வேறு நபருடன் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், பொலிஸாரின் உதவியுடன் அவரை தேடிப்பிடித்து வீட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளார்.
வீட்டுக்கு வந்த மனைவி சில தினங்களில் அனைவரையும் ஏமாற்றிய நிலையில் மீண்டும் தப்பிச் சென்றுள்ளதாக கணவன் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 3 மணி நேரம் முன்
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri