ரம்மியமான தோற்றத்தில் காட்சியளிக்கும் சிகிரியா! வெளியான உண்மைத் தன்மை
இரவு நேர சுற்றுலாவுக்காக சிகிரியா (Sigiriya) கோட்டை விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் சிகிரியாவின் படம் போலியானது என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கூற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில், இரவு நேர சுற்றுலாவுக்கான அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
இரவில் சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்படும்
வரலாற்று சிறப்புமிக்க சிகிரியா கோட்டை இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளையும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது.
மேலும், சிகிரியா கோட்டையை இரவில் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |